நடிகை சன்னி லியோன் நடிக்கும் ஷிரோ திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. கேரளாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடைப்பெற்ற சுவாரஸ்யமான காணொலி ஒன்றை சன்னி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
அந்தக் காணொலியில் தனது படக்குழுவினரின் வலிமையை லீச் அட்டையை வைத்து சோதிக்கிறார். இதுகுறித்து விவரித்த அவர், "என் குழுவின் வலிமையை சோதிக்கிறேன். பின்குறிப்பு: இதன் பிறகு லீச் காப்பாற்றப்பட்டு புல்லில் விடப்பட்டது.
பின்னர் சண்டைப் பயிற்சியாளரின் வயிற்றில் அடுத்த நாள் வரை வைக்கப்பட்டது. சுமார் 12 மணி நேரம் இந்த லீச்சுக்கு விருந்து என்றே கூறலாம்"
சன்னி நடித்து வந்த ஷிரோ திரைப்படத்தை இயக்குநர் குட்டநாதன் மர்பப்பா இயக்கியுள்ளார். இது மலையாளத்தில் சன்னி ஹீரோயினாக நடிக்கும் முதல் திரைப்படமாகும்.
இதையும் படிங்க: ’நவரசாவால் 11 ஆயிரம் குடும்பம் பயன்’ - கார்த்தி