நடிகை சன்னி லியோன் 'ஜிஸம் 2', 'ஜாக்பாட்', 'ராகினி', 'எம்எம்எஸ்-2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தார். அதுமட்டுமல்லாது தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் குத்தாட்டம் போட்ட இவருக்கு இந்தியா முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது..
இவர் வெறும் நடிகையாக மட்டுமல்லாது சமூக சேவகருமாகவும், தொழில் முனைவோருமாகவும் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாது பீட்டா இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் இவர் பீட்டா எழுத்து பதித்த டீ-சார்ட் அணிந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
தற்போது இவர் சைவ பாணியை ஊக்குவிக்கும் விதமாக விலங்குகளின் தோல்களில் இருந்து உருவாக்கும் பொருட்களை தவிர்க்கவேண்டும் என பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அது மட்டுமல்லாது நாய், பூனைகளை தத்தெடுப்பது, கருத்தடை செய்வதை ஊக்குவிப்பது, அதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு செய்துவருகிறார். தோல்களுக்காக விலங்குகளை கொல்லாதீர்கள் என்பது சன்னியின் தற்போதைய கருத்தாக இருக்கிறது.
இதையும் வாசிங்க: அடுத்து 'லைலா சன்னி ' - ஆடப்போவது எங்கயா இருக்கும்...?