ETV Bharat / sitara

அன்பைப் பரப்புங்கள்: சன்னி லியோன் வேண்டுகோள் - சன்னி லியோனின் பிறந்தநாள்

மும்பை: நடிகை சன்னி லியோன், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும்; முகக்கவசம் அணியுமாறும் சமூக வலைதளம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.

Sunny Leone
Sunny Leone
author img

By

Published : May 14, 2021, 5:20 PM IST

பாலிவுட் நடிகை சன்னி லியோன், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரது சமூக வலைதளப் பக்கங்களை பல லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

இவர் இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்டப் பல்வேறு மொழிகளின் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிகையாக மட்டுமல்லாது தொழிலதிபர், சமூக சேவகி, அம்மா என பன்முகத்தன்மையுடன் வலம் வருகிறார். சன்னி லியோனின் 40ஆவது பிறந்த நாள் நேற்று (மே 13) கொண்டாடப்பட்டது.

  • Thank you everyone for all your amazing bday wishes.
    My wish for all of you is to stay safe, be strong, wear a mask and please let’s spread love not hate!!
    God Bless you all! pic.twitter.com/n7ujs4pxiE

    — sunnyleone (@SunnyLeone) May 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சமூக வலைதளத்தில் சன்னியின் ரசிகர்களும் நெட்டிசன்களும் வழக்கம்போல் சன்னி லியோனின் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சன்னி லியோன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் மனஉறுதியுடன் பாதுகாப்பாக இருங்கள். தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள். அனைவரிடமும் அன்பைப் பரப்புங்கள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்!" என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: HBDSunnyLeone: சர்ச்சைகளுக்கு அஞ்சாத சன்னி லியோன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.