கரோனா பரவல் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்திற்குப் பங்களிக்கும் வகையில் அக்ஷய் குமார், அவரது மனைவி ட்விங்கிள் கண்ணா இணைந்து 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து சுனில்ஷெட்டி கூறியதாவது, "நாம் சில நேரங்களில் இதுபோன்ற சோதனை நேரத்தைக் கடந்துவர வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் உதவ முன்வர வேண்டும். நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், உதவி தேவைப்படும் ஒருவரை உங்களுக்குத் தெரிந்தால், அவர்களுக்கு தயவுசெய்து நீங்கள் உதவுங்கள்" என்று கூறினார்.
சுனில் ஷெட்டி ரஜினியின் நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.