மும்பையில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'எங்களது குடும்பத்தில் இந்து-முஸ்லீம் என்ற எந்த மதமும் இல்லை. என் மனைவி இந்து, நான் முஸ்லிம், என் குழந்தைகள் இந்தியர்கள்' எனத் தெரிவித்துள்ளார். மேலும், எனது மகள் ஒருமுறை பள்ளியின் விண்ணப்ப படிவங்களில் மதம் குறித்து கேட்டபோது 'நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இல்லை. நாம் அனைவரும் இந்தியர்கள்' என எளிமையாக அந்தப் படிவத்தில் எழுதியதாக ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதம் பற்றிய புரிதலை வெளிப்படையாக விளக்கியுள்ளார்.
-
Nothing beautiful happens without struggle. Let’s remember the struggle that gave us this beautiful day and celebrate both. #HappyRepublicDay to all. pic.twitter.com/d8cXzIhBj1
— Shah Rukh Khan (@iamsrk) January 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Nothing beautiful happens without struggle. Let’s remember the struggle that gave us this beautiful day and celebrate both. #HappyRepublicDay to all. pic.twitter.com/d8cXzIhBj1
— Shah Rukh Khan (@iamsrk) January 26, 2020Nothing beautiful happens without struggle. Let’s remember the struggle that gave us this beautiful day and celebrate both. #HappyRepublicDay to all. pic.twitter.com/d8cXzIhBj1
— Shah Rukh Khan (@iamsrk) January 26, 2020
மேலும், குடியரசு தின வாழ்த்துத் தெரிவித்துள்ள ஷாருக்கான், 'எந்த ஒரு காரியமும் போராட்டம் இன்றி நடக்காது. இந்த இனிமையான நாளையும், போராட்டத்தையும் நினைவுகூர்ந்து போற்றுவோம்' எனத் தெரிவித்துள்ளார்.
கனவுகாணத் துணியும் ஒவ்வொரு பெண்ணுக்கும் 'தலைவி' கங்கனா ரணாவத்தின் அர்ப்பணம்...!