கரோனா தொற்று பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில் நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தங்களது அலுவலகத்தின் காட்சி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த அலுவலகம் கரோனா தொற்றுக்காக தனிமைப்படுத்தும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவிய ஆரம்பத்தில் ஷாருக்கானும், அவரது மனைவியும் தங்களது நான்கு மாடி அலுவலகத்தை கரோனா தொற்றை முன்னிட்டு தனிமைப்படுத்தும் வசதிக்காக ப்ரிஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு கொடுப்பதாக உறுதியளித்தனர்.
தற்போது கௌரி அவரது அலுவலகம், தனிமைப்படுத்தும் அறைகளாக எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்த வீடியோ பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
22 படுக்கைகள் பாதுகாப்பான தூரத்தில் இருப்பது அந்த வீடியோவில் தெரிந்தது. அலுவலக இடத்தை தவிர கரோனாவை எதிர்த்து போராட ஷாருக்கானும், கௌரியும் அரசுக்கு பல வகையில் உதவியும் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க... வெப் சீரிஸில் கால் பதிக்கும் அனுஷ்கா ஷர்மா