ரசிகர்களே எச்சரிக்கை!
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் அண்மையில் இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிந்தார். லண்டன் நகரில் தான் பயணிப்பதற்காக ஊபர் நிறுவனத்தின் கால் டாக்ஸி சேவையை சோனம் பயன்படுத்தியுள்ளார்.
அந்தக் கால் டாக்ஸியில் பயணித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தன்னைப் பின்தொடரும் 12.8 மில்லியன் (ஒரு கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம்) ரசிகர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
சோனமின் பயங்கர அனுபவம்
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள சோனம், 'நண்பர்களே ஊபர் லண்டனுடன் எனக்குப் பயங்கரமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. தயவுசெய்து பாதுகாப்புடன் இருங்கள். உள்ளூர் பொது போக்குவரத்து அல்லது பாதுகாப்பான கால் டாக்ஸி வாகனங்களைப் பயன்படுத்துவதே சிறந்தது; பாதுகாப்பானது. நான் அதிர்ச்சியடைந்தேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
-
Hey guys I’ve had the scariest experience with @Uber london. Please please be careful. The best and safest is just to use the local public transportation or cabs. I’m super shaken.
— Sonam K Ahuja (@sonamakapoor) January 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hey guys I’ve had the scariest experience with @Uber london. Please please be careful. The best and safest is just to use the local public transportation or cabs. I’m super shaken.
— Sonam K Ahuja (@sonamakapoor) January 15, 2020Hey guys I’ve had the scariest experience with @Uber london. Please please be careful. The best and safest is just to use the local public transportation or cabs. I’m super shaken.
— Sonam K Ahuja (@sonamakapoor) January 15, 2020
இது குறித்து ட்விட்டரில் சோனமிடம் ரசிகர்கள் கேள்வியெழுப்பியதை அடுத்து அதற்குப் பதிலளித்த அவர், தான் பயணம் செய்த டாக்ஸியின் ஓட்டுநர் மிகவும் கடிந்து நடந்துகொண்டதாகவும், தன்னைப் பார்த்து திட்டிப் பேசியதால் அதிர்ச்சியடைந்தாகவும் பதிவிட்டிருக்கிறார்.
மன்னிக்கவும் சோனம்
சோனம் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவைக் கண்ட ஊபர் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மன்னிக்கவும் சோனம். இந்தச் செய்தி கேட்டு வருத்தமுற்றோம். சம்பந்தப்பட்டவர் மீது தாங்கள் புகார் அளிக்கலாம்' எனக் குறிப்பிட்டிருந்தது.
அதற்கு பதிலளித்த சோனம், தங்களது நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் புகார் அளிக்க முயற்சித்ததாகவும் தனது தகவல் சரியாகச் சென்று சேரவில்லை என்றும் கூறினார். மேலும், 'நீங்கள் உங்கள் தொழில்நுட்ப முறையை புதுப்பிக்க வேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டார்.
சோனமின் முன் அனுபவம்
முன்னதாக சமீபத்தில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்தபோது தனது கைப்பையை தொலைத்ததாகவும், இனிமேல் அந்த நிறுவனத்தின் சேவையைத் தொடரப் போவதில்லை என்றும் சோனம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
விஷ்ணுவர்தன் இயக்கும் 'ஷெர்ஷா' - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு