ETV Bharat / sitara

கனவை நனவாக்கிய சோனாக்ஷி சின்ஹா...!

author img

By

Published : Jan 23, 2021, 5:50 PM IST

ஹைதராபாத்: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ​​மும்பை பாந்த்ராவில் 4 பிஹெச்கே வீட்டை தனது சொந்த பணத்தில் வாங்கியுள்ளார்.

sonakshi
sonakshi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட்டிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தனது பெற்றோர், சகோதரர்களுடன் மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பெயர் ராமாயணம்.

சோனாக்ஷி சின்ஹா கடந்தாண்டு நவம்பர் மாதம் தனது வீட்டின் மேற்புறத்தை தனது விருப்பத்திற்கு மாற்றி வடிவமைத்துள்ளார். இருப்பினும் தனது சொந்த பணத்தில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதை தனது கனவாக கொண்டுள்ளார். இந்த கனவை சோனாக்ஷி சின்ஹா ​​தற்போது நனவாகியுள்ளது. மும்பை பாந்த்ராவில் 4 பிஹெச்கே வீட்டை தனது சொந்த பணத்தில் வாங்கியுள்ளார்.

இதுகுறித்து சோனாக்ஷி சின்ஹா ​கூறுகையில், நான் வேலை செய்ய தொடங்கியபோதே என் சம்பாத்தியத்தில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டிருந்தேன். அதை தற்போது அடைந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வசிக்கவே விரும்புவதாகவும் பெற்றோரை விட்டு விலக முடிவெடுக்கவில்லை என்றும் இது ஒரு பெரிய முதலீடு என்றும் சோனாக்ஷி சின்ஹா ​​தெரிவித்துள்ளார்.

சோனாக்ஷி சின்ஹா ​​தற்போது அஜய் தேவ்கன், சஞ்சய் தத், ஷரத் கெல்கர், ஆகியோர் நடிப்பில் உருவாகவுள்ள பூஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா ( Bhuj: The Pride Of India) படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் 1971ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்தோ-பாக் போரின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.