பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக தற்போது பேசப்பட்டுவருவது நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்துதான். அவர் தற்கொலை செய்துகொண்டார் என ஒரு சாராரும், அவர் கொலை செய்யப்பட்டார் அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என மற்றொரு சாராரும் தெரிவித்துவருகின்றனர்.
சுஷாந்த் மரணத்தை ஆரம்பத்திலிருந்தே மும்பை காவல் துறைதான் விசாரித்துவருகிறது. இந்நிலையில், சுஷாந்தின் தந்தை கே.கே. சிங், சுஷாந்தின் காதலி ரியா சக்கரபோர்த்தி மீது பிகார் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பிகார் காவல் துறை சுஷாந்த் மரணம் குறித்து விசாரித்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் சுஷாந்த் பல சிம் கார்டுகளை மாற்றியுள்ளதாக பிகார் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், அந்த சிம் கார்டுகள் சுஷாந்தின் பெயரில் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், " சுஷாந்த் உபயோகப்படுத்திய ஒரு சிம் கார்டு கூட அவர் பெயரில் பதிவாகவில்லை. ஒன்று மட்டும் அவரது நண்பர் சித்தார்த் பித்தானி பெயரில் பதிவாகியுள்ளது. தற்போது நாங்கள் கால் ரெக்கார்டுகளை ட்ராக் செய்துவருகிறோம். சுஷாந்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியான் குடும்பத்தினருடனும் விசாரணை மேற்கொள்வோம். ஆனால், அவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை" என்றனர்.
சுஷாந்த் இறந்ததற்கு முன்பாக ஆறு நாள்களுக்கு முன்று இறந்த திஷா சலியான் இறப்பு குறித்தும், விசாரணை நடத்தப்போவதாக பிகார் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க...சுஷாந்த் வழக்கை விசாரிக்க சென்ற காவல் அலுவலரை தனிமைப்படுத்திய சுகாதாரத் துறை!