ஹைதராபாத்: நதீம் - ஷ்ரவன் இணை இசைக் கலைஞர்களில் ஷ்ரவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஷ்ரவன், மும்பை மகிம் பகுதியில் உள்ள ரஹெஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஷ்ரவனின் நிலை குறித்து அவரது நெருங்கிய நண்பர் சமீர், ஷ்ரவனுக்கு நீரிழிவு நோய் இருந்தது. இதனால் அவரது நுரையீரல் மோசமாக பாதிப்படைந்துள்ளது. அவர் உடல்நிலை நலம்பெற இறைவனை பிரார்த்தியுங்கள் என தெரிவித்தார்.
தில் ஹேய் கி மாண்டா நகின், சாஜன், சடக், தீவானா, பர்தேஷ் உள்ளிட்டவை நதீம் - ஷ்ரவன் இணையின் இசையமைப்பில் உருவான ப்ளாக்பஸ்டர் படங்கள் என்றாலும், 1990ஆம் ஆண்டு வெளியான ‘ஆசிகி’ திரைப்படம் எப்போதும் மக்கள் மனதை விட்டு நீங்காது.