பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து சந்தித்து வந்த டிக்டாக் செயலி நெட்டிசன்களிடையே ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டருக்கு இணையாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
டிக்டாக் செயலி சமீபத்தில் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டவர்களின் 50 நபர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் ஹாலிவுட் பிரபலங்களான தி ராக், செலினா கோம்ஸ், வில் ஸ்மித், ஆகியோரைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் இணைந்துள்ளார். இவரை தற்போது வரை 17 கோடியே 30 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இது குறித்து ஷில்பா ஷெட்டி கூறுகையில், "நாம் அனைவரும் இப்போது மிகவும் கடினமான சூழலில் இருக்கிறோம். தினமும் செய்திகளைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. இந்த மோசமான சூழலுக்கு இடையே இந்த வீடியோக்களின் மூலம் என்னை மகிழ்வித்துக்கொள்ள முடிவு செய்தேன். இவற்றில் என் கணவரும் கூட அவ்வப்போது தோன்றியுள்ளார். என்னிடம் தற்போது இருக்கும் ஒரே நடிகர் அவர்தான்.
மக்கள் என் வீடியோக்களைப் பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தச் சூழலில் அவர்களை மனம் விட்டு சிரிக்க ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. என் வீடியோக்கள் அவர்கள் முகத்தில் புன்னகையை வரவழைப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. டிக்டாக்கில் முதல் 50 இடங்களுக்குள் வந்ததன் மூலம் இந்த சூழலில் மக்களை உற்சாகப்படுத்துவதில் நான் வெற்றி பெற்றுள்ளேன் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் ஷில்பா ஷெட்டியின் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவும் வேலைக்காரியிடம் சில்மிஷம் செய்த கணவரை வெளுத்து வாங்கிய வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலானது.
இதையும் படிங்க: 'நல்லா சொல்லுங்க... நான் சொல்லி கேட்கல' - கணவரை கும்மிய ஷில்பா ஷெட்டி