நடிகை ஷில்பா ஷெட்டி, தமிழில் பிரபு தேவா உடன் ‘மிஸ்டர் ரோமியோ’, விஜய்யுடன், 'குஷி' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் 2009ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு 2012ஆம் ஆண்டு வியான் என்ற ஆண்குழந்தைபிறந்தது. பிப்ரவரி 15 ஆம் தேதி இவர்களுக்கு மீஷா என்ற பெண்குழந்தை பிறந்தது. இந்தப் பெண் குழந்தை வாடகை தாய் மூலம் பிறந்தது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதனையடுத்து நேற்று(மே 21) வியான் தனது 8ஆவது பிறந்தநாளை கொண்டாடினான். இந்த பிறந்தநாளை முன்னிட்டு ஷில்பா தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் வியானின் குழந்தை கால புகைப்படம் முதல் தற்போது வரை உள்ள புகைப்படத்தை வைதத்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான் உன் பக்கத்திலேயே இருப்பேன் என்று உனக்கு நான் சத்தியம் செய்கிறேன். உனக்கு அரவணைப்பு தேவைப்படும்போதெல்லாம், நான் உன் அருகில் இருப்பேன். நான் உன்னை நேசிப்பதையும் உன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எப்போது நிறுத்தமாட்டேன். நீ எனது பெருமை...நீ எனது சன்ஷைன். 8 ஆவது வயதில் அடி எடுத்துவைத்திருக்கும் வியான் ராஜூக்கு அம்மாவின் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார்.
தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ஷில்பா ஷெட்டி கரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவும் கணவருடன் லுட்டியடிக்கும் டிக்டாக் வீடியோவும் சமூகவலைதளத்தில் அவ்வப்போது வைரலாகி வருகிறது.