ETV Bharat / sitara

'நல்லா சொல்லுங்க... நான் சொல்லி கேட்கல' - கணவரை கும்மிய ஷில்பா ஷெட்டி - latest cinema news

ஷில்பா ஷெட்டியும் அவரது கணவரும் சேர்ந்து செய்த வேடிக்கையான டிக்டாக் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Shilpa Shetty
Shilpa Shetty
author img

By

Published : May 14, 2020, 6:25 PM IST

பிரபுதேவாவின் 'மிஸ்டர் ரோமியோ' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், ஷில்பா ஷெட்டி. பாலிவுட் திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஷாருக்கான், அக்‌ஷய் குமார், சல்மான் கான் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது சமூக வலைதளத்திலும் மிக ஆக்டிவாக ஷில்பா இருந்து வருகிறார். இந்த நிலையில் ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ஷில்பா, தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் சேர்ந்து செய்த டிக்டாக் வீடியோ ஒன்று, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஷில்பா ஷெட்டி பிசியாக வேலை செய்து கொண்டிருக்கும்போது, ராஜ் குந்த்ரா அவருக்கு முத்தம் கொடுக்க வருகிறார். அப்போது ஷில்பா 'தான் வேலையாக இருப்பதாகவும், இந்த நேரத்தில் முத்தம் வேண்டாம்' எனவும் சொல்லி அவரை தடுக்கிறார்.

அப்போது அங்கிருக்கும் வேலைக்காரியும் 'நல்லாப் புரியும்படி சொல்லுங்க; நானும் பல தடவை சொல்லிட்டேன். கேட்கமாட்டேன் என்கிறார்' என்று புகார் கூறுகிறார்.

உடனே ஷில்பா புகாரின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு கணவரை கும்மி எடுக்கிறார். இந்த வேடிக்கையான வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டது.

இதையும் வாசிங்க: மருத்துவப் பணியாளர்களை மரியாதையுடன் நடத்துங்கள் - ஷில்பா ஷெட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.