உலகம் முழுவதுமுள்ள பல்வேறு தரப்பு ரசிகர்களின் மனதை ஆட்கொண்டு, கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக பாலிவுட் உலகில் கோலோச்சிவரும், கிங் கானாகிய நடிகர் ஷாருக்கான், தன் மனதை ஆட்கொண்ட தன் இனிய மனைவி கௌரி கானுடன் தனது 28ஆவது திருமண நாளை இன்று கொண்டாடுகிறார்.
'கப்பிள் கோல்ஸ்' என இன்றைய தலைமுறை இளைஞர்களாலும் கொண்டாடப்பட்டுவரும் ஷாருக் - கௌரி ஜோடிக்கு, அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திருமணநாள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
-
Feels like forever, seems like yesterday....Nearly three Decades and Dearly three kids old. Beyond all fairy tales I tell, I believe this one, I have got as beautiful as beautiful can be! pic.twitter.com/3qHwP7kjWx
— Shah Rukh Khan (@iamsrk) October 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Feels like forever, seems like yesterday....Nearly three Decades and Dearly three kids old. Beyond all fairy tales I tell, I believe this one, I have got as beautiful as beautiful can be! pic.twitter.com/3qHwP7kjWx
— Shah Rukh Khan (@iamsrk) October 24, 2019Feels like forever, seems like yesterday....Nearly three Decades and Dearly three kids old. Beyond all fairy tales I tell, I believe this one, I have got as beautiful as beautiful can be! pic.twitter.com/3qHwP7kjWx
— Shah Rukh Khan (@iamsrk) October 24, 2019
திருமண நாளையொட்டி தனது சமூக வலைதளப் பக்கங்களில், காதல் மனைவி கௌரியுடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ஷாருக், "நேற்றுதான் தொடங்கியதுபோல் இருந்தாலும் இது என்றைக்குமான உறவு. முப்பது வருடங்களில், மூன்று குழந்தைகள். கற்பனைக் கதைகளையெல்லாம் தாண்டி, எனக்குக் கிடைத்த இந்த உறவைக்காட்டிலும் அழகான உறவு ஒன்று இல்லை என நான் நம்புகிறேன்" எனக்கூறி தன் மனைவி கௌரியையும், தன் திருமண உறவையும் சிலாகித்துப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க:
விக்ரம் பிரபு - துல்கர் சல்மான் இணையும் ஆக்ஷன் - த்ரில்லர்!