ETV Bharat / sitara

ஷாருக்கானின் உணர்ச்சிப்பூர்வமான வீடியோ - வைரல் - bollywood cinema

பாலிவுட் சினிமாவின் கிங் என அழைக்கப்படும் ஷாருக்கான் நடிக்க வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஷாருக்கான்
author img

By

Published : Jun 26, 2019, 11:00 AM IST

பாலிவுட் சினிமாவின் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் பாலிவுட் சினிமாவிற்குள் வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டன. எந்தவித சினிமா பின்னணியும் இல்லமால் சின்னத்திரையில் தோன்றி வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். தீவானா படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த ஷாருக்கான் இன்றுவரை கதாநாயகனாகவே நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ஜீரோ திரைப்படம் படுதோல்வியடைந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் ரசிகர்களின் வெறுப்பையும் சந்தித்தது.

மேலும், ஷாருக்கான் பாலிவுட்டிற்கு வந்த இந்த 27 வருடங்களில் வெற்றிகளையும் தோல்விகளையும் கண்டு துவண்டு போகாமல் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். வளர்ந்துவரும் இளம் கதாநாயகர்களுக்கு இன்ஸ்பிரேஷன் இவரே. இந்நிலையில், 27ஆவது வருடத்தைக் கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் #27goldenyearofsrk என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டாக் இந்திய அளவில் முதல் இடத்தையும், உலக அளவில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்நிலையில், 27ஆவது வருடத்தைக் கொண்டாடி வரும் அவரது ரசிகர்களுக்கு, ஷாருக்கான் உணர்ச்சிப் பூர்வமான காணொலி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு நன்றியை தெரிவித்துள்ளார். இதில், "வணக்கம் நண்பர்களே! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்திய சினிமாவில் வெற்றி தோல்வி என இரண்டையும் சரிபாதியாக கடந்து 27ஆவது வருடத்தைக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறந்த எண்டர்டெயினராக பாலிவுட் சினிமாவில் என்னுடைய வயதில் அறைநூற்றாண்டைக் கடந்துள்ளேன். ரசிகர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "சினிமாவிற்குள் வந்தபோது என்னிடம் எதுவும் இல்லை. இப்போது எல்லாம் இருக்கிறது. அனைத்தும் நீங்கள் தந்தது. மறக்காம ஹெல்மெட் மாட்டி பைக் ஓட்டுங்க" என பைக்கில் அமர்ந்தபடி பேசினார். தற்போது இந்தக் காணொலி வைரலாகி வருகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.