பெங்களூருவைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி. சிறு வயதிலேயே தானாகக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக் கொண்டவர். பழைய நூற்றாண்டின் தேதியைச் சொன்னாலும்கூட, உடனே அதன் கிழமையைச் சொல்லிவிடும் அளவுக்கு கணக்கில் அவர் கில்லாடி. சிக்கலான கணக்குகளையும் உடனே தீர்த்து விடுவார்.
இவரது இந்த அதீத திறன் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. வேகமான மனிதக் கணினியாக இருந்தவர் கடந்த 2013ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனையடுத்து, தற்போது இவரது வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சகுந்தலா தேவியாக வித்யாபாலன் நடிக்கிறார். ரோனிஸ்குருவாலா தயாரிக்கும் இப்படத்தை அனு மேனன் இயக்குகிறார். படத்தை 2020ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் கரோனா அச்சம் காரணமாக படத்தைத் திரையரங்கில் வெளியிட முடியவில்லை. இந்நிலையில் 'சகுந்தலா தேவி' படத்தை டிஜிட்டல் தளமான OTTஇல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதனையடுத்து இப்படத்தை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. இப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 2 நிமிடங்கள் 47 வினாடிகள் ஓடும் இந்த ட்ரெய்லரில், சகுந்தலா தேவியாக வரும் வித்யாபாலன் தொழில்முறை கணிதவியலாளராகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
புத்திசாலித்தனம், சில நிமிடங்களில் மிகவும் சிக்கலான கணித சமன்பாடுகளைக் கூட தீர்க்கும் திறன் உள்ளிட்டவையைக் கச்சிதமாக செய்துள்ளார் வித்யா பாலன். சகுந்தலா தேவியின் மகளாக தங்கல் படத்தில் நடித்த சன்யா மல்ஹோத்ரா நடிக்கிறார். தாய்-மகள் இருவருக்கும் இடையிலான கசப்பான-இனிமையான உறவை விவரிக்கிறது இப்படத்தின் ட்ரெய்லர். மகளுடனான தனது உறவை விட கணிதத்துடனான தனது உறவுக்கு சகுந்தலா தேவி முன்னுரிமை அளித்திருப்பதாக ட்ரெய்லரில் காட்சிப்படுத்தி உள்ளனர்.