டெல்லி: ரசிகர்களை உத்வேகப்படுத்தும் விதமாக ஷாகித் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
மகிழ்ச்சியின் சித்திரத்தை ('Picture of happiness') பகிர்ந்த ஷாகித், துருக்கிய கவிஞர் நசிம் ஹிக்மத் தனது நண்பரும் ஓவியருமான அபிதின் டினோவிடம் ‘மகிழ்ச்சியின் சித்திரம்’ ஒன்று வரையச் சொன்னபோது அவர் வரைந்த படம் இதுதான். மகிழ்ச்சி என்பது துன்பமற்று இருப்பதல்ல, துன்பத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த போஸ்ட்டில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். ஷாகித்தின் தம்பி இஷானும் இதில் கமெண்ட் செய்துள்ளார்.