ETV Bharat / sitara

அமெரிக்கன் ஐஸ்வர்யா ராய்!

author img

By

Published : Jul 22, 2021, 12:26 PM IST

அமெரிக்கன் ஐஸ்வர்யா ராய் செலினா மேரி கோம்ஸ் (Selena Marie Gomez) இன்று தனது 29ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Selena Gomez Birthday Special
Selena Gomez Birthday Special

ஹைதராபாத் : பாடகி நடிகை என ஹாலிவுட்டில் வலம்வரும் செலினா கோம்ஸ், மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துக்கு சொந்தக்காரர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள கிராண்ட் பிரைரி என்ற இடத்தில் 1992ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி பிறந்தவர் செலினா.

Selena Gomez Birthday Special
செலினா குழந்தை பருவம்

செலினாவின் ஆரம்ப கால திரைத்துறை வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுந்து வழங்கினார். அதன்மூலம் கிடைத்த புகழில் நிதானமாக முன்னேறினார்.

Selena Gomez Birthday Special
இளவயதில் செலினா

இவரின் வாழ்வில் பார்னி அண்ட் ப்ரண்ஸ்ட் (Barney & Friends) தொலைக்காட்சி தொடர் திருப்புமுனையாக அமைந்தது. குழந்தைகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட இத்தொடர் 2002-2004 காலகட்டங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Selena Gomez Birthday Special
நடிகை செலினா

இதில் கிடைத்த புகழின் மூலம் சின்னத்திரை தொடர்களிலிருந்து சினிமாத்துறைக்குள் நுழைந்தார். தொடர்ந்து 2008இல் அனெதர் சிண்ட்ரெல்லா ( Another Cinderella), 2009களில் பிரின்ஸஸ் புரோடக்ஸன் புரோகிராம் ( Princess Protection Program), விஸார்ட்ஸ் ஆஃப் வேவர்லி த மூவி (Wizards of Waverly Place: The Movie), 2010இல் ரமோனா அண்ட் பீஸூஸ் ( Ramona and Beezus ) என வெற்றி படங்களை கொடுத்தார்.

Selena Gomez Birthday Special
கண்கவர் அழகி செலினா

செலினா கோம்ஸ் சினிமா மட்டுமின்றி பாடகியாகவும் வலம்வருபவர். இவரின் பாடல்களை கேட்க இளசுகள் தவம் கிடைந்த காலங்களும் உண்டு. 2015ஆம் ஆண்டு தனது பிறந்த தினத்தில் குட் பார் யூ என்ற ஆல்பத்தை வெளியிட்டார்.

Selena Gomez Birthday Special
பாடகி செலினா கோம்ஸ்

இது ஒரு லட்சத்து 79 ஆயிரம் பிரதிகள் விற்று சக்கை போடு போட்டது. செலினா மேரி கோம்ஸ் பாடல்கள் பாப் ரகத்தை சார்ந்தவை. பாடல் பாடிக்கொண்டே நடனமும் இவர் ஆடுவார். இவர் இதுவரை 355 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Selena Gomez Birthday Special
விருது வழங்கும் விழாவில் செலினா

அதில் 122 விருதுகளை தனதாக்கியுள்ளார். இவர் 2009ஆம் ஆண்டு அல்மா விருதை வென்றார். தொடர்ந்து அமெரிக்கன் மியூசிக் (இசை) விருது, அமெரிக்கன் சமூகத்தின் பாப் விருதுகள், பில்போர்டு பெண்கள் விருது, பிராவோ ஓட்டோ, பிரேக் டியூடோ விருதுகள், ஆண்டின் கவர்ச்சி பெண் விருது, கிரேசி விருதுகள், ஹாலிவுட் ஸ்டைல் அவார்டு, ஐஹார்ட் ரேடியோ மியூசிக் அண்ட் வீடியோ விருது, இளவயது கலைஞர் விருது, இளவயது ஹாலிவுட் நடிகை விருது, யூடியூப் மியூசிக் விருது என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

Selena Gomez Birthday Special
நடிகை செலினா
Selena Gomez Birthday Special
பல்வேறு தோற்றங்களில் செலினா

போர்ப்ஸ் பத்திரிகையின் 30 வயதுக்கு உள்பட்ட நட்சத்திரங்கள் பட்டியலிலும் செலினா மேரி கோம்ஸ் இடம்பிடித்துள்ளார்.

Selena Gomez Birthday Special
நடிகை செலினா

இந்தச் சாதனை பெண்மணி இன்று தனது 29ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஈடிவி பாரத் சார்பாகவும் தாலாட்டு தின வாழ்த்துகள்.

Selena Gomez Birthday Special
29ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

ஹேப்பி பர்த்டே அமெரிக்கன் ஐஸ்வர்யா ராய்!

இதையும் படிங்க : ஹாலிவுட்டில் கால் பதிக்கிறாரா ஆலியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.