ஹைதராபாத்: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி., சந்தோஷ் குமாரின் கிரீன் இந்தியா சேலஞ்சை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட சஞ்சய் தத் சந்தோஷ் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஹைதராபாத்திலுள்ள சில்பாராமம் பகுதியில் மரங்களை நட்டார்.
இதையடுத்து, எம்.பி. சந்தோஷ் குமார் மரங்கள் நடுவதன் அவசியத்தை சஞ்சய் தத் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அவரது இந்தக் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட சஞ்சய் தத், மக்கள் அனைவரும் தங்களது சுற்றுப்புறத்தை மாசில்லாமல் காக்க மரங்களை நடுமாறும், கிரீன் இந்தியா சேலஞ்சை முக்கியமானதாகக் கருதி சுற்றுப்புறங்களை பசுமையாக வைத்திருக்குமாறும் கூறினார்.
முன்னதாக, தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ், எம்.பி. சந்தோஷ் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கிரீன் இந்தியா சேலஞ்சை வலியுறுத்தும் விருக்ஷா வேடம் என்ற புத்தகத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பசுமை இந்தியா சேலஞ்சை செய்து முடித்த ஐஸ்வர்யா - கேத்ரின்