பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆகஸ்ட் 8ஆம் தேதி மூச்சுத் திணறல், நெஞ்சுவலி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் உடல் நலம் சீராகி நேற்று (ஆகஸ்ட்.10) வீடு திரும்பினார். அவரை மருத்துவர்கள் தொடர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே சஞ்சய்தத் திரையுலகிலிருந்து சிலகாலம் விலகி இருப்பதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, "நண்பர்களே மருத்துவ ரீதியிலான காரணங்களுக்காக, நான் என் பணியில் இருந்து சிறிய ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். என் குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கின்றனர்.
- — Sanjay Dutt (@duttsanjay) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Sanjay Dutt (@duttsanjay) August 11, 2020
">— Sanjay Dutt (@duttsanjay) August 11, 2020
என் நல விரும்பிகள் யாரும் கவலைப்படவோ தேவையின்றி எதுவும் யோசிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல்வாழ்த்துக்களோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.