கன்னட திரையுலகில் போதைப்பொருள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் (சிசிபி) விசாரணை நடத்திவருகின்றனர்.
இது தொடர்பாக ஏற்கெனவே கன்னட திரைப்பட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில், மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் அல்வாவின் மகனும் விவேக் ஓபராய் சகோதரருமான ஆதித்யா அல்வாவின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது ஆதித்யா தலைமறைவானார்.
தலைமறைவான அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தற்போது மும்பையில் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப் பொருட்கள் விவகாரம்: விவேக் ஓபராய் வீட்டில் சோதனை - சஞ்சனா கல்ராணி
மும்பை: கன்னட திரையுலக போதைப் பொருட்கள் விவகாரம் தொடர்பாக தலைமறைவான ஆதித்யா அல்வா குறித்து அறிய மத்திய குற்றப்பிரிவு அலுவலர்கள் விவேக் ஓபராய் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.