ETV Bharat / sitara

பார்க்க வேடிக்கையா இருக்கும் இதை செய்ய அதிக கவனம் தேவை: 'கோமாளி' நடிகை - சம்யுக்தா ஹெக்டே கோமாளி

'கோமாளி' படத்தின் நாயகி சம்யுக்தா ஹெக்டே ஜிம்மில் ஓர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Samyuktha hegde
Samyuktha hegde
author img

By

Published : Feb 27, 2020, 1:56 PM IST

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் ‘கோமாளி’. வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ் தயாரித்த இந்த படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.

16 ஆண்டுகளாக கோமாவிலிருக்கும் ஜெயம் ரவி, இயல்பு நிலைக்கு திரும்பிய பின் நவீன உலகில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு வியக்கிறார். அத்துடன் தனது பழைய காதலியை தேடிச்செல்லும்போது ஏற்படும் சம்பவங்கள் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் 'கோமாளி' 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையையும் தற்போதைய நவீன உலகில் நாம் தொலைத்த விஷயங்களையும் திரையில் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கும். படத்தின் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதில் பள்ளி மாணவராக வரும் ஜெயம் ரவிக்கு பள்ளி பருவ காதலியாக வந்தவர் சம்யுக்தா ஹெக்டே. பின் படம் முழுவதும் இவரின் நடிப்பு ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்யுக்தா ஹெக்டே ஜிம்மில் அந்தரத்தில் உள்ள பார் கம்பிகளில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குரங்குகள் செய்வது நமக்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால் அதற்கு அதிக சக்தியும் நிலையான தன்மையும், கவனமும் தேவை. அதுபோன்று இன்று ஜிம்மில் நான் மேற்கொண்ட பார் கம்பிகளின் உடற்பயிற்சியும் என்று அதில் கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க: 16 வருட கோமா வாழ்க்கை : 'கோமாளி' ட்ரெய்லர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.