ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில், அவருக்கு பள்ளிப்பருவ காதலியாக நடித்திருந்தவர் சம்யுக்தா ஹெக்டே. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பல்வேறு வகையான உடற்பயிற்சிகளையும் உடற்பயிற்சி அறிவுரைகளையும் பகிர்ந்துவருகிறார்.
கரோனா தொற்றால் தற்போது இந்தியா முழுவதும் அமலில் இருக்கும் தேசிய ஊரடங்கு உத்தரவால் சம்யுக்தா ஹெக்டே தினமும் ஒரு நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுவருகிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
சமீபத்தில் வீட்டில் இவர் டூபிஸூடன் நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது. தற்போது சம்யுக்தா கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான க்யூன் படத்தின் ஒரு பாடலுக்கு தனது வீட்டு மொட்டை மாடியில் வைத்து நடனமாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் அதனுடன் தேசிய ஊரடங்கு உத்தரவின் 5ஆம் நாள் வீடியோ இது. இந்த வீடியோவை பதிவிட வைத்தவர்களுக்கு நன்றி. இனி அடுத்து எந்த பாடலுக்கு நடனமாடுவது என்பது குறித்து இங்கு பரிந்துரையுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.