இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஓய்வுக்கு பின்னான வாழ்க்கைக்காக பல்வேறு தரப்பினரும் தோனிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தோனியை சந்தித்த தருணங்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "என்னிடம் அற்புதமான புகைப்படம் உள்ளது. அது விலை மதிப்பில்லாத பொக்கிஷம். 2007ஆம் ஆண்டு கர்ஜாத்தில் உள்ள ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது.
எனக்கு 22 வயது அப்போது, உதவி இயக்குநராக பணியாற்றி வந்தேன். இந்த குறிப்பிட்ட பணியை நான் ஏன் ஏற்று செய்தேன் என்றால் இந்த விளம்பர படத்தில் நடித்திருப்பவர் எம்.எஸ். தோனி என்பதால்தான். நிறைய வேலை செய்தேன் ஆனால் சம்பளம் குறைவு. ஆனாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அவருடன் இருப்பதையே பெரிதாக விரும்பினேன்.
அந்த நேரத்தில் நான் காயமடைந்திருந்தேன், என்னுடைய முயற்சி திருவினையாக்கும் என்ற எதிர்பார்ப்பில் வலி உடனேயே பணியாற்றினேன். தோனியை சந்திக்க வேண்டும், புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். கடைசியில் அவரை நேரில் பார்த்தபோது அதிசயத்தில் உறைந்து போனேன். அவர் மிகவும் எளிமையானவர் ஆக இருந்தார். பழக மிகவும் இனிமையானவர். நெருங்கிய தோழர் போல் பழகினர். அன்பின் ஒளிவிட்டம் அவரை சுற்றி வந்தது. இதனால் அவர் மீதான அன்பு மரியாதை மதிப்பு இன்னும் வளர்ந்தது.
என்னுடைய முதல் படம் முடிந்தவுடன் எங்கள் குழுவின் ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா என்னை ஒரு நாள் அழைத்தார். தோனியின் மிகப்பெரிய ரசிகனே, மெஹ்பூப் ஸ்டுடியோவில் தோனி படப்பிடிப்பில் இருக்கிறார். இப்போது நீ இங்கு வந்தால் அவரை சந்திக்கலாம் என்றார். நான் உடனே அனைத்தையும் விட்டுவிட்டு தோனியை காண அங்கு சென்றேன். அங்கு அவர் என்னிடம் கலகலப்பாக பழகினார். 'பேண்ட் பஜா பாராத்' படத்தில் என்னுடைய நடிப்பை பாராட்டினார்.
என்னுடைய தொப்பி ஜெர்சியில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார், நான் அந்த நிமிடங்களில் வானில் மேகங்களிடையே மிதப்பது போல் உணர்ந்தேன். அதிலிருந்து ஒவ்வொரு முறையும் தோனியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது என்னை அறியாமல் எனக்குள் ஒரு பூரிப்பும் உற்சாகமும் எழும். என் அண்ணன் என்னை ஊக்கமளித்து உற்சாகப் படுத்துவது போல் அது இருக்கும்.
தோனி ஒரு மிகப்பெரிய விளையாட்டு வீரர். அவர் கிரிக்கெட் ஆடுவதை பார்த்தது என் வாழ்வில் நான் செய்த அதிர்ஷ்டம். விளையாட்டின் மிகப்பெரிய ஆளுமை. எப்போதும் என் நாயகன் தோனி தான். நம் நாட்டிற்கு புகழைக் கொண்டு வந்ததற்காகவும், கோடிக்கணக்கான இதயங்களை பெருமையில் நிரப்பியதற்காகவும் நன்றி மாஹி பாய்" என்று ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
என் நாயகன் எப்போதும் தோனிதான் - ரன்வீர் சிங் - தோனியின் புகைப்படங்கள்
மும்பை: தோனியின் சந்திப்பு குறித்த தனது இளமைக்கால நினைவுகளை ரன்வீர் சிங் தற்போது பகிர்ந்துள்ளார்.