ETV Bharat / sitara

’அக்‌ஷய் உடன் தங்கியிருந்த மும்பை நாள்கள்!’ - நினைவுகூர்ந்த ராணா! - அக்‌ஷய்குமார் குறித்து நினைவுகூர்ந்த ராணா

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தன்னை விடியற்காலை வேளையில் எழவைத்து ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் செய்தது குறித்தும், தனது திருமண நிகழ்வுகள் குறித்தும் நடிகர் ராணா டகுபதி பகிர்ந்துள்ளார்.

அக்‌ஷய்குமார் குறித்து நினைவுகூர்ந்த ராணா

author img

By

Published : Oct 7, 2020, 2:33 PM IST

விடியற்காலையே எழுந்து சீரான தினசரி வாழ்க்கை முறையையும், கட்டுக்கோப்பான உடற்கட்டையும் பேணுவதில் பெயர்பெற்றவர் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். பொதுவாக தன்னுடைய படங்களில் நடிக்கும் சக நடிகர்களுக்கும் இவற்றைப் பழக்கப்படுத்தி விடுவதில் அக்‌ஷய் வல்லவர்.

அந்த வகையில், ’ஹவுஸ்ஃபுல் 4’ திரைப்படத்தில் தன்னுடன் நடித்த பிரபல தென்னிந்திய நடிகர் ராணா டகுபதியிடமும் தனது இந்த சிறந்த பழக்கங்களைக் கடத்தியுள்ளார் அக்‌ஷய்.

தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்து நினைவுகூர்ந்துள்ள ராணா, ”மும்பை வந்து அக்‌ஷய் குமாருடன் இணைந்து பணியாற்றியபோது மும்பை குறித்த வேறு ஒரு கண்ணோட்டம் வெளிப்பட்டது. மும்பையில் தங்கியிருந்த பாதி நாள்கள் அக்‌ஷய் உடன் தான் இருந்தேன். பேபி, ஹவுஸ்ஃபுல் போன்ற படங்களில் அவருடன் பணிபுரிந்துள்ளேன். என்னை விடியற்காலை 5.45 மணிக்கு ஒரு ரேடியோ நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அதை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா சூழலுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மிஹீகா பஜாஜ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட ராணா, தனது திருமண நிகழ்வுகள் குறித்தும் நினைவுகூர்ந்துள்ளார்.

”திருமண மண்டபம் என் வீட்டிற்கு மிக அருகிலேயே அமைந்திருந்தது. எனது இரண்டு நண்பர்கள் மட்டுமே உடன் இருந்தார்கள். அதிகபட்சம் 30 பேர் திருமணத்தில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வி.ஆர் தொழில்நுட்பத்தில் எனது திருமண வீடியோ பதிவு செய்யப்பட்டது. நேரில் வர முடியாத என் குடும்பத்தினர், நண்பர்களுக்கு, திருமணத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்ட திருப்தியை அளிக்கும் வகையில் வி.ஆர் ஹெட்செட்களுடன் இந்த வீடியோ பதிவுகளை அனுப்பி வைத்து மகிழ்ந்தோம்” எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.