ETV Bharat / sitara

திருமணம் குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்! - ரகுல் ப்ரீத் சிங்கின் காதலன்

'நான் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன்; திருமணம் நடக்கும் போது நடக்கும்' என ரகுல் ப்ரீத் சிங் தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

Rakul
Rakul
author img

By

Published : Nov 22, 2021, 3:51 PM IST

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் ரகுல்ப்ரீத் சிங். இவர் அக்டோபர் 10ஆம் தேதி தனது பிறந்தநாளான அன்று தான் காதலிக்கும் நபர் குறித்த தகவலை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்ததார்.

அந்த நபர் இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானி. இவர் தமிழில் த்ரிஷா நடிப்பில் வெளியான 'மோகினி' படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

ரகுல் ப்ரீத் சிங் தனது காதலை தெரியப்படுத்தியதில் இருந்து பலர் சமூகவலைதளங்களில் இருவருக்கும் திருமணம் எப்போது என்ற கேள்வியை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

தற்போது ரகுல் ப்ரீத் சிங் இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறுகையில், " நான் எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான விசயங்களை பகிரதோன்றியதால் அதைப்பற்றி கூறினேன். ஏனெனில் எனது தனிப்பட்ட வாழ்க்கை அழகானது. அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

ஜாக்கி பாக்னானி உடனான திருமணம் நடக்கும் போது நடக்கும். நான் மற்ற விஷயங்களை எவ்வாறு சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொள்கிறோனோ அதே போல் என் திருமணம் குறித்தான விசயத்தையும் பகிர்வேன். அதுவரை பொறுமையாக இருங்கள். நான் இப்போது எனது தொழிலான நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: எனக்கு கிடைத்த பரிசு நீங்கள் - த்ரிஷா பட நாயகனை காதலிக்கும் ரகுல்ப்ரீத் சிங்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.