மும்பை: நடிகை தீபிகா படுகோனின் உதவியாளர் கரிஷ்மா பிரகாஷுக்கு மீண்டும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு பிறகு பாலிவுட்டில் போதைப் பொருள் விநியோகம் அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையை தொடங்கினர். இதில் தீபிகா படுகோனின் உதவியாளர் கரிஷ்மா கைது செய்யப்பட்டார்.
கரிஷ்மா பிணை கோரிய வழக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு பிணை மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக கரிஷ்மா தரப்பு வழக்கறிஞர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கரிஷ்மா தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன் வைத்தார். கரிஷ்மா உடன் குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை தவிர கரிஷ்மா முதன்மை குற்றவாளி என நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை, வழக்கு விசாரணையில் இருக்கும்போது அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், எனினும் வழக்கு விசாரணை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து பிணை வழங்கும் உரிமை நீதிமன்றத்துக்கு உண்டு எனக் கூறி பிணை வழங்க மறுத்தனர். மேல் முறையீடு செய்ய விரும்பினால், ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சஞ்சனா, ராகினி வழக்கு: போதை மருந்து எடுத்துக்கொண்டது உறுதி