உலக அழகி பட்டம் வென்று, தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'தமிழன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்து ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.
பாலிவுட் திரையுலகில் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தபோது 'குவான்டிகோ' என்ற ஹாலிவுட் டிவி தொடரில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றார் நடிகை பிரியங்கா சோப்ரா. இதைத்தொடரந்து அங்கு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைய ஹாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார்.
-
Happy Diwali to everyone celebrating. From mine to yours... दीपावाली की शुभकामनाएँ।। #diwaliincabo #peaceandprosperity pic.twitter.com/7AmKUBDltD
— PRIYANKA (@priyankachopra) October 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy Diwali to everyone celebrating. From mine to yours... दीपावाली की शुभकामनाएँ।। #diwaliincabo #peaceandprosperity pic.twitter.com/7AmKUBDltD
— PRIYANKA (@priyankachopra) October 27, 2019Happy Diwali to everyone celebrating. From mine to yours... दीपावाली की शुभकामनाएँ।। #diwaliincabo #peaceandprosperity pic.twitter.com/7AmKUBDltD
— PRIYANKA (@priyankachopra) October 27, 2019
அப்போது ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனஸ் மீது காதல் வயப்பட்ட பிரியங்கா, அவரைத் திருமணம் செய்து கொண்டு ஹாலிவுட் மருமகள் ஆனார். திருமணத்துக்குப் பிறகும் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.
தீபாவளியை பிரியங்கா தனது கணவர் நிக் ஜோனஸூடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படத்தை தனது ட்விட்டர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தீபாவளி அவருக்கு தல தீபாவளியாகும். இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.