ETV Bharat / sitara

மூன்று ஆண்டுகளுக்கு பின் பிரியங்கா சோப்ராவின் பாலிவுட் கம்பேக் - #TheSkyIsPink டிரெய்லர் - பிரியங்கா சோப்ரா நடிக்கும் தி ஸ்கை இஸ் பிங்க்

ஹாலிவுட் மருமகள் ஆன பின்பு பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் பாலிவுட் படமான 'தி ஸ்கை இஸ் பிங்க்' காதல், சென்டிமென்ட், எமோஷன் என உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது.

நடிகை பிரியங்கா சோப்ரா
author img

By

Published : Sep 10, 2019, 5:54 PM IST

மும்பை: மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பிரியங்கா சோப்ரா நடித்திருக்கும் 'தி ஸ்கை இஸ் பிங்க்' என்ற ஹிந்தி திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் திரையுலகில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தபோது 'குவான்டிகோ' என்ற ஹாலிவுட் டிவி தொடரில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றார் நடிகை பிரியங்கா சோப்ரா. இதைத்தொடரந்து அங்கு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைய ஹாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார்.

priyanaka in quantico
குவாண்டிகோ ஹாலிவுட் தொடரில் எஃப்பிஐ கதாபாத்திரத்தில் தோன்றிய பிரியங்கா

ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் மீது காதல் வயப்பட்ட பிரியங்கா,அவரைத் திருமணம் செய்து கொண்டு ஹாலிவுட் மருமகள் ஆனார். திருமணத்துக்குப் பிறகும் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

priyanka and nick jones
காதல் கணவர் நிக் ஜோனஸுடன் பிரியங்கா

இதனிடையே உலக அழகி பட்டம் வென்று, தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'தமிழன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்து ஹாலிவுட்டிலும் கலக்கி வருவதை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

priyanaka in baywatch
'பேவாட்ச்' ஹாலிவுட் படத்தில் பிரியங்கா

இந்த நிலையில், மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 'தி ஸ்கை இஸ் பிங்க்' என்ற பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பிரியங்கா. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் ஃபரான் அக்தர் நடித்துள்ளார். 'தங்கல்' படத்தில் ஆமிர் கானின் மகளாக தோன்றிய ஸைரா வாசிம், இப்படத்தில் பிரியங்காவின் மகளாக நடித்துள்ளார்.

முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் தோன்றிய பிரியங்கா 'தி ஸ்கை இஸ் பிங்க்' படத்தில் இளவயது பெண்ணின் அம்மாவாக நடித்துள்ளார்.

காதல், பாசம், சென்டிமென்ட் என பல்வேறு உணர்வுகளின் கலவையாக உருவாகியிருக்கும் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மூன்று நிமிடங்கள் வரை ஓடும் இந்த ட்ரெய்லர் ட்ரெண்டாகியுள்ளது.

Priyanka chopra comeback bollywood movie 'The Sky Is Pink' unveiled
'தி ஸ்கை இஸ் பிங்க்' படத்தில் பிரியங்கா சோப்ரா

ஆர்.எஸ்.வி.பி. நிறுவனம் படத்தை தயாரிக்க, சோனாலி போஸ் இயக்கியுள்ளார். பிரியங்காவின் பாலிவுட் கம்பேக் திரைப்படமாக அமைந்திருக்கும் 'தி ஸ்கை இஸ் பிங்க்' வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்னதாக செப்டம்பர் 13ஆம் தேதி கனடா நாட்டிலுள்ள டொராண்டோ நகரில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற டொரண்டோ இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் திரையிடப்படவுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

Intro:Body:

ஹாலிவுட் மருமகள் ஆன பின்பு பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் பாலிவுட் படமான 'தி ஸ்கை இஸ் பிங்க்' காதல், செண்டிமெண்ட், எமோஷன் என உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.