1984ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பூச்சக்கொரு மூக்குத்தி' என்ற நகைச்சுவை திரைப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். இப்படத்தை 2003ஆம் ஆண்டு இந்தியில் 'ஹங்காமா' என்ற பெயரிலும் ரீமேக் செய்திருந்தார்.
குடும்ப நகைச்சுவையை மையமாக வைத்து வெளியான இந்தப்படம் பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்தது.
ஹங்காமா திரைப்படத்தில் அக்ஷய் கண்ணா, பரேஷ் ராவல், ரிமி சென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரியதர்ஷன் மீண்டும் இயக்குகிறார். இப்படத்தில் பரேஷ் ராவல், ஷில்பா ஷெட்டி, பிரநிதா சுபாஷ், மீஸன் ஜஃப்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
-
Ready for Confusion Unlimited? Priyadarshan & Ratan Jain return with reboot of everyone's favorite comedy entertainer #Hungama2 Produced by @rtnjn Hungama2 will release on 14 Aug@priyadarshandir @SirPareshRawal @TheShilpaShetty @MeezaanJ @pranitasubhash #Venus @hungama2film pic.twitter.com/3ASjoydxmD
— Paresh Rawal (@SirPareshRawal) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ready for Confusion Unlimited? Priyadarshan & Ratan Jain return with reboot of everyone's favorite comedy entertainer #Hungama2 Produced by @rtnjn Hungama2 will release on 14 Aug@priyadarshandir @SirPareshRawal @TheShilpaShetty @MeezaanJ @pranitasubhash #Venus @hungama2film pic.twitter.com/3ASjoydxmD
— Paresh Rawal (@SirPareshRawal) December 24, 2019Ready for Confusion Unlimited? Priyadarshan & Ratan Jain return with reboot of everyone's favorite comedy entertainer #Hungama2 Produced by @rtnjn Hungama2 will release on 14 Aug@priyadarshandir @SirPareshRawal @TheShilpaShetty @MeezaanJ @pranitasubhash #Venus @hungama2film pic.twitter.com/3ASjoydxmD
— Paresh Rawal (@SirPareshRawal) December 24, 2019
இப்படத்தை ரதன் ஜெயின், கணேஷ் ஜெயின், சேத்தன் ஆர் ஜெயின் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
'ஹங்காமா 2' படம் 2020 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சைஃப் அலி கான் நடிக்கும் 'ஜவானி ஜானிமன்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு