தனது சிறப்பான நடிப்பின் மூலம் பாலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகராக அறியப்பட்டவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடித்த இவர், 2008ஆம் ஆண்டு வெளியான ‘கை போச்சே’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.
பின் சுத் டெசி ரொமன்ஸ், பிகே உள்ளிட்ட நடித்திருந்தாலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படத்தில் தோனியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில், 34 வயதான இவர் இன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது திடீர் மரணம் பாலிவுட் வட்டாரங்கள் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மரணத்துக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், வளர்ந்து வந்த இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் விரைவில் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் சிறந்து விளங்கினார்.
திரையுலகில் தனது எழுச்சி மூலம் பலருக்கும் உத்வேகம் அளித்த அவர், தனது நடிப்பினால் பல மறக்கமுடியாத தருணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரது மறைவு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
Sushant Singh Rajput...a bright young actor gone too soon. He excelled on TV and in films. His rise in the world of entertainment inspired many and he leaves behind several memorable performances. Shocked by his passing away. My thoughts are with his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sushant Singh Rajput...a bright young actor gone too soon. He excelled on TV and in films. His rise in the world of entertainment inspired many and he leaves behind several memorable performances. Shocked by his passing away. My thoughts are with his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 14, 2020Sushant Singh Rajput...a bright young actor gone too soon. He excelled on TV and in films. His rise in the world of entertainment inspired many and he leaves behind several memorable performances. Shocked by his passing away. My thoughts are with his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) June 14, 2020