ETV Bharat / sitara

வெளிநாடு வாழ் இந்தியாரை ஏமாற்றிய ஷில்பா : காவல் துறையில் புகார் - ஷில்பா ஷெட்டியின் படங்கள்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி - அவரது கணவர் மீது தற்போது மோசடி குற்றச்சாட்டு ஒன்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Shilpa Shetty
author img

By

Published : Mar 6, 2020, 1:01 PM IST

வெளிநாடு வாழ் இந்தியர் சச்சின் ஜே.ஜோஷி என்பவர் 2014ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட சத்தியுக் கோல்ட் என்னும் தங்க நிறுவனத்தில் ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனத்துக்கு ராஜ் குந்த்ராவும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டியும் இயக்குநராக இருந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் சச்சின், 2014ஆம் ஆண்டு கிட்டதட்ட ஒரு கிலோ தங்கத்தை ரூ.18.58 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். மேலும் ஐந்தாண்டு முடிவில் குறிப்பிட்ட விலை தள்ளுபடியில் தங்கம் வழங்கப்படும் எனவும் அப்போது அந்த நிறுவனம் வாக்குறுதி கொடுத்துள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதியுடன் ஐந்தாண்டு காலம் நிறைவடைந்துள்ளது. பின் அந்த நிறுவனத்தை தொடர்புகொண்ட சச்சினுக்கு அந்த நிறுவனம் மூடப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் முக்கிய நபர்களை சந்திக்க முயற்சி மேற்கொண்ட சச்சினுக்கு அது தோல்வியில் முடிவடைந்தது. பின் இந்த நிறுவனம் குறித்து இணையத்தில் தேடியபோது அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து 2017 ஆம் ஆண்டே ஷில்பாவும் அவரது கணவரும் பதவி விலகியிருப்பது தெரிந்தது.

இது குறித்து சச்சின் தற்போது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அதில், ஷில்பா ஷெட்டி போன்ற பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி இந்த நிறுவனம் மோசடி நிறுவனமாக செயல்பட்டுள்ளது. இதில் நான் மட்டும் 18.58 லட்சம் ரூபாயை இழந்துள்ளேன். இது போன்று இன்னும் பல முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை இழந்திருக்காலம். எனவே காவல் துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் வாசிங்க: 13 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் திரும்பும் 'ஷில்பா ஷெட்டி'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.