மும்பை: ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி படத்துக்காக 2.5 லட்சம் ரூபாய் செலவில் ஹேட்ஸ்டைல் செய்துள்ளார் நடிகை நோரா ஃபதேஹி.
பாலிவுட் இயக்குநர் ரெமோ டிசோசா இயக்கியிருக்கும் ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் வருண் தவான், ஷரத்தா கபூர், பிரபுதேவா, நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரபதேவாவின் சூப்பர்ஹிட் பாடலான முக்கால முக்காபுலா பாடல் இந்தப் படத்தில் ரீ-கிரியேட் செய்யப்பட்டுள்ளது. இதன் புரொமோ விடியோ கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
நடன கலைஞர்களுக்கு இடையேயான போட்டியை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைந்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து படத்தில் டான்ஸராகத் தோன்றும் ஃபதேஹி, இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார்.
![Actress Nora Fatehi in Street Dancer 3D](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/nora-fatehi-3_2301newsroom_1579800657_465.jpg)
இது குறித்து அவர் கூறியதாவது:
துபாயில் ஸ்ட்ரீட் டான்ஸர் படப்பிடிப்பின்போது போனி டெயில் ஸ்டைலில் ஹேர் ஸ்டைல் மாற்றிக்கொண்டேன். நானும், ஹேர் ஸ்டைலிஸ்ட் மார்சிலோவும் ஹேர் ஸ்டைல் தயாரிப்பாளரை கண்டறிந்து, எனது வேண்டுகோளுக்கிணங்க போனிடெயில் ஸ்டைலை எனக்கு வடிவமைத்து கொடுத்தார். மிகவும் நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க விரும்பினோம்.
படத்தில் ஷரத்தாகபூருடனான போட்டியின்போது அழுத்தமான அதிர்வை ஏற்படுத்த வேண்டும் என எண்ணினோம். அந்தவகையில் டான்ஸ் ஆடும்போது மிகவும் கனமான போனிடெயிலாக இருந்தது. இருப்பினும் நடன காட்சி படப்பிடிப்பின்போது மாறுபட்ட அதிர்வை ஏற்படுத்தியதால் அதை நான் இழுத்து கட்டினேன். படம் முழுவதும் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.