ஹாலிவுட் நடிகரும் தொழில் முறை மல்யுத்த வீரருமான டுவைன் ஜான்சன் (எ) ராக் உலகளவில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவர் தற்போது கால் கடோட், ரியான் ரொனால்ட்ஸ் உள்ளிட்டோருடன் நெட்பிளிக்ஸ் இணையத்திற்காக ரெட் நோட்டீஸ் படத்தில் நடித்துவருகிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தற்போது கொரோனா பாதிப்புக் காரணமாக இப்படத்தின் ஒப்பந்தத்தை நெட்ஃபிக்ஸ் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. இது குறித்து டுவைன் ஜான்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த நேரத்தில் நான் உங்கள் அனைவரின் கடின உழைப்பிற்கு நன்றி கூறுகிறேன்.
தற்போது நம் அனைவரின் முக்கியக் குறிக்கோள் குடும்பத்துடன் சேர்ந்து பாதுகாப்பாக இருப்பது. உங்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து எல்லோரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் விழிப்புணர்வுடனும் இருங்கள்" எனக் கூறியுள்ளார்.