ETV Bharat / sitara

தவறுகள் செய்திருக்கிறேன் ; அவற்றைக் கடந்து வந்துவிட்டேன் - நசிருதீன் ஷா - நசிருதீன் ஷா படங்கள்

புது டெல்லி : தனது திரையுலக வாழ்க்கை குறித்து நசிருதீன் ஷா தற்போது கூறியுள்ளார்.

Naseeruddin Shah
Naseeruddin Shah
author img

By

Published : Nov 25, 2020, 7:43 PM IST

திரைத்துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பங்களிப்பை செலுத்திவரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் நசிருதீன் ஷா. இவர் மூன்று முறை தேசிய விருது பெற்றவர். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது ’பாந்திஷ் பாண்டிட்ஸ்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்து டிஜிட்டல் தளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.

தனது திரையுலக வாழ்க்கை குறித்து நசிருதீன் ஷா முன்னதாகத் தெரிவிக்கையில், ”என் வாழ்க்கையில் ஒரு சின்ன வருத்தம்கூட எனக்கில்லை. நான் தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால் அவற்றைக் கடந்து வந்துவிட்டேன். அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறியிருக்கிறேன்.

என் வாழ்க்கையில் வருத்தம் என்று ஏதாவது வைத்திருந்தால் நான் ஒரு முட்டாள். மிக மோசமான சில படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் நடிக்கும்போது எனக்கு திருப்தி இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நடித்ததில் வருத்தமில்லை. எனது ஒவ்வொரு முடிவுமே எனக்கு ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

நான் நினைத்தைவிட இந்தப் பயணம் அற்புதமாகவும் திருப்திகரமாகவும் இருக்கிறது. எனது கனவுகளை நனவாக்க முடிந்தது எனக்கு கிடைத்த ஆசிர்வாதமே. இனி புதிதாக கனவுகளை நான் தேட வேண்டும் என நினைக்கிறேன். வாழ்க்கையிடமிருந்து நாம் எந்தச் சலுகைகளையும் எதிர்பார்க்கக் கூடாது.

ஆரம்பத்தில் இந்தத் துறைக்கு நான் சரியான ஆளா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அதை சமாளித்து ஒரு நிலை அடைந்துபோது எனக்கு ஒரு மன திருப்தி கிடைத்தது. நான் தேர்ந்தெடுத்திருக்கும் துறையில் கற்பதற்கென பெரிய உலகமே இருக்கிறது.

நிறைய இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு தான் கற்பித்தலைப் பற்றி அறிந்துகொண்டேன். அது எனக்கு ஊக்கத்தைத் தருகிறது. இளம் நடிகர்களுக்கு உதவுவது, அவர்களுடன் பணியாற்றுவது அவர்கள் திறனை வளர்க்க உதவுவது என அதில் நிறைய மகிழ்ச்சி இருக்கிறது. நான் வாழும் வரை இதைத் தொடர முடியும் என நம்புகிறேன்” எனக்கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.