திரை நட்சத்திரங்களின் வாரிசுகள், சாதாரணமாகவே பெற்றோரின் வழியைப் பின்பற்றுவது வழக்கம். அந்த வரிசையில், பலரை நாம் எடுத்துக்காட்டுக்குக் கூறமுடியும். ஆனால், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஸ்மாயா, கவிதை மற்றும் ஓவியத்தின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி சாதனை படைத்துள்ளார்.
அவர், கிரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (Grains of Stardust) என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை, கடந்த பிப்.14ஆம் தேதி வெளியிட்டார். இதில், விஸ்மாயா எழுதிய கவிதைகளும், ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. முன்னதாக, இந்தப் புத்தகத்தின் அட்டை பக்கம் வெளியீட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்தப் புத்தகத்தின் நகலை, பாலிவுட் கிங் அமிதாப்பச்சனுக்கு, மோகன்லால் அனுப்பியுள்ளார்.
புத்தகத்தைப் படித்த பிக் பி, தனது வாழ்த்துகளை விஸ்மாயாவுக்கு தெரிவித்திருந்தார். அதில், நட்சத்திர நடிகரின் மகளுக்கு எனது வாழ்த்துகள். கவிதைகள், ஓவியங்கள் அடங்கிய புத்தகம், ஆக்கப்பூர்வமான உணர்திறன் பயணத்தை வழங்குகிறது" எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது, அமிதாப்புக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார். அதில், மிகப்பெரிய ஸ்டாரிடமிருந்து மாயாவுக்குப் பாராட்டுக்குள் கிடைத்துள்ளன. என்னைப் பொறுத்தவரை இது ஒரு தந்தையாகப் பெருமைமிக்க தருணம். நன்றி அமிதாப்பச்சன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஜகமே தந்திரம் டீசரில் பெயர் இல்லை - கோபத்தில் உள்ளாரா தனுஷ்?