சினிமாத்துறையில் பெரிய வயது வித்தியாசத்தில் காதலிக்கும் அல்லது திருமணம் செய்யும் நடிகர்களை ரசிகர்கள் கேலி செய்யும் அவலம் நீண்ட நாள்களாகவே நடக்கிறது.
இதில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ், தமிழில் ஆர்யா - சையிஷா போன்ற நடிகர்களுக்கிடையே வெகு நாள்களாக காதலித்துவரும் மலைக்கா - அர்ஜுன் கபூர் ஜோடியும் மாட்டிக்கொண்டது.
சமீபத்தில் தாங்கள் காதலிக்கும் செய்தியை அதிகாரப்பூர்வமாக மலைக்கா - அர்ஜுன் கபூர் ஜோடி ஊடகங்களில் தெரிவித்தனர். இந்நிலையில், அண்மையில் அர்ஜுனுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மலைக்கா, தான் காதலனான அர்ஜுனுக்கு கன்னத்தில் முத்தமிடுவதுபோன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
அப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் மலைக்கா - அர்ஜுனுக்கு இருக்கும் வித்தியாசத்தை காரணம் காட்டி கேலி செய்துவருகின்றனர். 40 வயதை தாண்டிய மலைக்காவை 30 வயதை கடந்த அர்ஜுன் காதலிப்பது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதையும் படிங்க: ‘தர்பார்’ பட டிக்கெட் விலை கூடுதல் விலையில் விற்பதாகப் புகார்!