மும்பை: மேக்கப் இல்லாமலும், ஃபில்டர் உபயோகப்படுத்தாமலும் தனது அசல் தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை லிசா ரே.
47 வயதாகும் லிசா ரே ஹீரோயினாக அறிமுகமானது தமிழ் சினிமாவில்தான். 1996இல் வெளிவந்த 'நேதாஜி' என்ற படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்திருப்பார். இதன் பின்னர் தெலுக்கு, ஹிந்தி படங்களில் நடித்து வந்தவர், 2012இல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் லிசா ரே, டிவி தொடர்களிலும் தலை காட்டி வருகிறார். தற்போது அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாகும் 'ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்' ஒரிஜினல் தொடரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 47 வயதில் நான் ஃபில்டர் மற்றும் மேக்கப் இல்லாமல் இருக்கிறேன். நமது ஒரிஜினல் தோற்றத்தை பார்ப்பதற்கு யாருக்காவது தைரியம் இருக்கிறதா? இளவயதில் எனக்கு அப்படி பார்க்க தைரியம் இருந்ததில்லை.
![Lisa Ray shares 'free and unfiltered' photo](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4464595_lisa-ray-2.jpg)
நமது மதிப்பை எல்லோராலும் அங்கீகரிக்க இயலாது. ஆனால் நாம்தான் நம் தோற்றத்தையும், அவை கூறும் கதைகளையும் நேசிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நம் மதிப்பு என்ன என்பதை உணரலாம். உலகமும் அதனை பிரதிபலிக்கும் (ஒரு வேளை அப்படி உணரவில்லை என்றாலும் பொருட்படுத்தத் தேவையில்லை) என்று குறிப்பிட்டுள்ளார்.