'தோனி', 'லஸ்ட் ஸ்டோரி', 'பரத் என்னும் நான்', 'கபீர் சிங்', 'குட்நியூஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாலிவுட் திரைத் துறையில் முன்னணி நடிகையாக வலம்வருவர்களில் கியாரா அத்வானியும் ஒருவர். இவருக்கு இந்திய முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருந்துவருகின்றனர்.
கியாராவைப் போன்று தோற்றமும் பேச்சும்கொண்ட கல்பனா சர்மா என்பவர் சமீபகாலமாக சமூக வலைதளமான டிக் டாக்கில் இணைவாசிகளை வெகுவாகக் கவர்ந்துவருகிறார். சமீபகாலமாக கல்பானவும் கியாரா அத்வானியின் பேச்சுகள், கபீர் சிங் படத்தில் அவர் பேசிய வசனங்கள் உள்ளிட்டவைகளை அச்சு அசலாக கியாரா போன்ற செய்து அசத்திவருகிறார்.
டிக்டாக்கில் இது ஒன்றும் புதியதல்ல; இதற்கு முன்பு பாலிவுட் பிரபலங்களான அக்ஷய் குமார், சல்மான் கான், ஆலியா பட், டைகர் ஷிராஃப், கத்ரீனா கைஃப், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா சோப்ரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், கரீனா கபூர், சைஃப் அலி கான், தமிழில் விஜய் போன்றவர்களை அப்படியே அச்சு அசலாக வீடியோ செய்து டிக்டாக்கில் பதிவேற்றிவருவது வழக்கமான ஒன்றாகவே இருந்துவருகிறது.
அதிலும் குறிப்பாக கத்ரீனா கைஃப் போன்று இருந்த அலினா ராய் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் பஞ்சாப் இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். கியாரா நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'கபீர் சிங்', 'சூட் நியூஸ்' உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. தற்போது இவர் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் உருவாகிவரும் 'பூல் புலையா 2' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இதையும் வாசிங்க: காப்பியடித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட கியாரா அத்வானியின் டாப்லெஸ் புகைப்படம்!