ETV Bharat / sitara

கத்ரீனா கைஃப் - விக்கி கெளசல் திருமணம் செய்து கொள்ளப்போகும் இடம் இதுதானா? - விக்கி கெளசல் படங்கள்

பாலிவுட் பிரபலங்களான கத்ரீனா கைஃப் - விக்கி கெளசல் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

v
v
author img

By

Published : Nov 12, 2021, 3:42 PM IST

பாலிவுட் திரைத் துறையில் தனது நடிப்பு, கவர்ச்சியின் மூலம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் கத்ரீனா கைஃப். இவர், முன்னணி கதாநாயகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துவருகிறார்.

தற்போது கத்ரீனா பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்கி கெளசல் என்பவரை டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்ரீனா கைஃப் - விக்கி கெளசல் திருமண கொண்டாட்டங்கள் டிசம்பர் 7 முதல் 12 வரை நடைபெறவுள்ளதாகவும் ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் ஹோட்டலில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிகிறது.

இவர்களது திருமண ஏற்பாடுகளை முன்னணி ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் இணைந்து செய்துவருகின்றன. இதற்காக பலர் மாதோபூர் வந்திருப்பதாகவும் நவம்பர் 9ஆம் தேதி கத்ரீனா கைஃப் - விக்கி கெளசல் திருமணத்திற்காக பத்து பேர் கொண்ட குழு சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் ஹோட்டலுக்கு வந்துசென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில், திருமணம் குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் அந்தக் குழுவினர் மேற்கொண்டனர். மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு உள்ளிட்ட அனைத்தும் அவர்கள் ஒரு ரிகசல் செய்ததாகத் தெரிவித்தனர்.

இருப்பினும் கத்ரீனா கைஃப் - விக்கி கெளசல் தங்களது திருமணம் குறித்தான எந்த அறிவிப்பையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கவர்ந்திழுக்கும் இடையழகி கத்ரீனா கைஃப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.