பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தர்மா புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தனது மகன்களான ரூஹி - யஷ் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு குழந்தைகள் - பெற்றோரின் கடமைகள் குறித்து 'தி பிக் தாட்ஸ் ஆப் லிட்டில் லவ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில், “விசேஷமான ஒன்றை பற்றி உங்களுக்கு அறிவிக்க நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைகளுக்கான என்னுடைய முதல் புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது” என்று கூறி காணொலி ஒன்றையும் இணைத்து கரண் ஜோஹர் வெளியிட்டார்.
இவரின் இந்தப் பதிவைக் கண்ட நெட்டிசன்கள் வழக்கம்போல் அவரை ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர்.
கரண் ஜோஹரின் பதிவின் பின்னூட்டத்தில் நெட்டிசன் ஒருவர், நீங்கள் உங்கள் குழந்தைகளை நேசிக்கிறீர்கள். அதேபோலத்தான் சுஷாந்த் - கங்கனா ஆகியோரின் பெற்றோர்களும் தங்கள் குழந்தையை மிகவும் நேசிக்கிறார்கள். நீங்கள் எப்படி உங்கள் அரசியல் செல்வாக்கை வைத்து அவர்களின் வாழ்க்கையை நாற்றமாக்கலாம்? எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
மற்றொருவர் நீங்கள் சுஷாந்தை கொலைசெய்திருக்க மாட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் பாலிவுட்டில் வாரிசு அரசியலைப் பரப்பியவர் நீங்கள்தான். மிக மோசமான நடிகர்களை எல்லாம் பாலிவுட்டில் உருவாக்கியுள்ளீர்கள். திறமையானவர்களுக்கு வாய்ப்பு தராதது மூலம் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள் எனப் பதிவிட்டிருந்தார்.
இன்னொருவர், கரண் ஜோஹர் தயவுசெய்து சமூக வலைதளத்தில் நீங்கள் எதையும் பதிவிட வேண்டாம். உங்கள் பதிவுகளைப் பார்க்கும்போது வெறுப்பு தோன்றுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
புத்தகம் குறித்த பதிவை வெளியிட்ட கரண் ஜோஹர்: சாட தொடங்கிய நெட்டிசன்கள் - கரன் ஜோகர் எழுதிய புத்தகம்
மும்பை: இயக்குநர் கரண் ஜோஹர் தான் எழுதிய புத்தகம் குறித்து அறிவிப்பை சமூக வலைதளத்தில் பதிவிட்டதைடுத்து சமூக வலைதள வாசிகள் அவரை சாடிவருகின்றனர்.
![புத்தகம் குறித்த பதிவை வெளியிட்ட கரண் ஜோஹர்: சாட தொடங்கிய நெட்டிசன்கள் கரண் ஜோஹர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:22:31:1599040351-8642890-589-8642890-1598969451621.jpg?imwidth=3840)