பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி ஆகியோரின் வீடுகளில் கடந்த மூன்று நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இவர்கள் இருவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தால்தான் பழிவாங்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்பட்டது என சமூகவலைதளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து டாப்ஸி ட்விட்டர் பக்கத்தில், "மூன்று நாள்கள் தீவிரமாக நடத்தப்பட்ட சோதனையில் மூன்று பொருள்களை கண்டுபிடித்துள்ளனர். பாரிசில் நான் வாங்கியதாகக் கூறப்படும் பங்களாவின் சாவி. ஏனெனில், கோடை காலம் வருகிறது அல்லவா? எதிர்காலத்தில் என்னை சிக்க வைப்பதற்காக நான் முன்னதாக வேண்டாம் என மறுத்திருந்த 5 கோடி ரூபாய்க்கான ரசீது. மதிப்பிற்குரிய நிதியமைச்சர் சொன்னதுபோல் 2013ஆம் ஆண்டு என்னிடம் நடத்தப்பட்ட சோதனையின் நினைவுகள். பின்குறிப்பு: நான் அவ்வளவு மலிவானவள் அல்ல" என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து கங்கனா ரணாவத் ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் மலிவானவர்தான். ஏனென்றால் பாலியல் குற்றங்களைச் செய்பவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பெண்ணியவாதி நீங்கள். உங்களைக் கட்டுப்படுத்தும் எஜமான் காஷ்யப்பின் வீட்டில் வரி ஏய்ப்பு காரணமாக 2013ஆம் ஆண்டும் சோதனை நடந்தது. அரசாங்க அலுவலர்கள் உங்கள் சோதனை பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர். நீங்கள் குற்றமற்றவர் என்றால் அதற்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்று நிரபராதி என்று நிரூபியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்
.