ETV Bharat / sitara

பாலிவுட் குயின் கங்கனா நடிக்கும் 'பங்கா' - டிரெய்லர் வெளியீடு! - ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம்

கங்கனா நடிக்கும் 'பங்கா' திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Panga
Panga
author img

By

Published : Dec 24, 2019, 8:15 AM IST

பாலிவுட் நடிகை கங்கனா - இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி கூட்டணியில் உருவாகிவரும் படம் 'பங்கா'.

கபடி விளையாட்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜஸ்ஸி கில், நீனா குப்தா, பங்கஜ் திரிபாதி, ரிச்சா சத்தா, முகேஷ் திவாரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கபடி விளையாட்டில் சாதிக்கும் பெண்ணின் வாழ்க்கை அனுபவங்களைப் பகிரும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக கங்கனா சுமார் இரண்டு மாதங்கள் கபடி பயிற்சியும் எடுத்து நடித்துள்ளார். கங்கனா இப்படத்தில் ஜெயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சங்கர் எஷான் லாய் குழு இசையமைக்கிறது. ஜே.ஐ. பட்டேல் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே படத்தின் போஸ்டர்களை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கங்கனா தற்போது தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஏ.எல்.விஜய் இயக்கும் 'தலைவி' திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

நடிகர் ராகவா லாரன்ஸுக்கு மக்கள் மருத்துவர் விருது!

Intro:Body:

Kangana starrer Panga trailer out

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.