ETV Bharat / sitara

ஒரே நேரத்தில் காந்தி - நேதாஜி ஆதரவாளராக இருக்க முடியாது - மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய கங்கனா - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய கங்கனா

இந்தியாவுக்கு கிடைத்த சுதந்திரம் பிச்சை தான் என சர்ச்சை கருத்தைக் கூறிய கங்கனா, தற்போது மகாத்மா காந்தி குறித்த சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Kangana
Kangana
author img

By

Published : Nov 17, 2021, 9:33 PM IST

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்துக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்வில் பங்கேற்ற கங்கனா, "இந்தியாவுக்கு 2014ஆம் ஆண்டுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது. அதற்கு முன்பு கிடைத்தது சுதந்திரம் இல்லை பிச்சைதான்" எனத் தெரிவித்தார்.

இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலானது. கங்கனாவின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலதரப்பட்டோர் எதிரான கண்டனத்தைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தற்போது கங்கனா தேசத் தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி குறித்தான சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் 1940இல் வெளியான செய்தித் தாளின் சில கட்டுரைகளை மேற்கொள் காட்டி தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

Kangana
கங்கனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

அதில் கங்கனா கூறியிருப்பதாவது, "நீங்கள் காந்தி ஆதரவாளராக இருக்கலாம். இல்லையேல் நேதாஜியின் ஆதரவாளராக இருக்கலாம். ஆனால், ஒரே நேரத்தில் நீங்கள் இருவரின் ஆதரவாளராக இருக்க முடியாது. எனவே நீங்கள் சுயமாக முடிவு செய்து யாருக்கு ஆதரவு என்பதை தேர்வு செய்யுங்கள்.

அதிகாரப் பசியில் இருந்தவர்கள், மிகவும் தந்திரமாக செயல்பட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் காட்டிக்கொடுத்து ஒப்படைத்தனர். அத்தகையவர்களுக்கு உண்மையில் அடக்குமுறையை எதிர்த்துப் போராடும் துணிச்சல் இல்லை.

Kangana
கங்கனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

உங்களின் ஒரு கன்னத்தில் யாரேனும் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள். அப்போது தான் நமக்கு சுதந்திரம் கிடைக்கும் எனக் கற்றுக் கொடுத்தவர்கள் நமக்கு சுதந்திரத்தை பிச்சை எடுத்து வாங்கிக்கொடுத்தார். ஆகவே, உங்களுடைய ஹீரோக்களை மதிநுட்பத்துடன் தேர்வு செய்யுங்கள்.

மகாத்மா காந்தி ஒருபோதும் பகத் சிங்கையோ, சுபாஷ் சந்திர போஸையே ஆதரித்தது இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நினைவாற்றலில் எல்லா தலைவர்களையும் ஒரே அளவில் சீர்தூக்கி நிறுத்தி அவர்களை, அவர்களின் பிறந்தநாளில் நினைவு கூர்வது ஏற்புடையது அல்ல.

Kangana
கங்கனாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இது மேம்போக்கானது. பொறுப்பற்ற செயலும் கூட. வரலாற்றையும் உண்மையான வரலாற்று நாயகர்களையும் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Kangana Ranaut : பைத்தியக்காரத்தனம்... தேச துரோகம் - கங்கனாவைச் சாடிய வருண் காந்தி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.