ETV Bharat / sitara

மும்பை வந்தடைந்த கங்கனா ரணாவத்! - மும்பை விமான நிலையம்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இமாசலப் பிரதேசத்திலிருந்து விமானம் மூலம் மும்பை வந்தடைந்தார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
author img

By

Published : Sep 9, 2020, 4:07 PM IST

Updated : Sep 9, 2020, 4:15 PM IST

கரோனா ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து நடிகை கங்கனா ரணாவத் தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அங்கிருந்தபடியே, சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு நீதி, பாலிவுட்டில் போதைப் பொருள்களின் பயன்பாடு, வாரிசு அரசியல், பாலிவுட்டில் நிழல் உலக தாதாக்களின் செயல்பாடுகள், மும்பை மற்றும் அதன் காவல் துறையினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தார்.

கடந்த சில நாட்களாகவே மும்பை குறித்தும் அந்நகர காவல் துறையினர் குறித்தும் கங்கனா கூறிவந்த கருத்துக்களுக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாது கங்கனா மும்பைக்கு வர வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக தான் மும்பை வருவதாக கங்கனா அறிவித்திருந்தார். அதன்படி, அவர் மும்பை விமான நிலையத்திற்கு இன்று (செப்.09) வந்தடைந்தார்.

இமாச்சலப் பிரதேசத்திலிருந்து மும்பை வருவதற்கு முன் கங்கனா, அவரது சகோதரி, உதவியாளர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கங்கனாவிற்கு இந்த பரிசோதனை இரண்டு முறை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கங்கனா மும்பை வந்தடைந்தார். அவருக்கு மத்திய அரசு சமீபத்தில் ‘Y-Plus’ பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக, மும்பையிலுள்ள கங்கனாவின் தயாரிப்பு நிறுவன அலுவலக கட்டடம், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கங்கனாவின் பங்களாவில் உள்ள அலுவலக பகுதியை இடிக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியது. ஆனால், பங்களாவை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Last Updated : Sep 9, 2020, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.