பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், தனது சர்ச்சைக் கருத்துகளாலும், தடாலடியான நடவடிக்கைகள் மூலமாகவும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து செய்திகளை ஆக்கிரமித்து வருகிறார். தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ’தலைவி’ படத்தில் நடித்துள்ளார் கங்கனா. 23ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் முன்னதாக கரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக கங்கனாவின் பிறந்த நாளன்று வெளியான ’தலைவி’ ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அப்போது தமிழ்நாடு வந்த கங்கனா, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இந்நிலையில், தற்போது மராத்திய, கொங்கனி மக்கள் கொண்டாடும் பண்டிகையான குடிபட்வா பண்டிகைக்கும் நவராத்திரிக்கும் வாழ்த்து தெரிவித்து கங்கனா, மீண்டும் தான் ஆன்மீகத்தில் லயித்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், துர்கை புகைப்படம் ஒன்றை கையில் வைத்துள்ள அவர், நான் ஊரிலிருந்து வந்தபோது பலவற்றை இழந்துள்ளேன். ஆனால் இந்த புகைப்படம் மட்டுமே என்னுடன் பயணித்தது. இவர் தான் என்னை கவனித்துக் கொண்டார் என நான் நம்புகிறேன். உங்களுக்கு இன்று என்ன செய்வது என்று தெரியாவிட்டால், உங்கள் அம்மாவை வணங்கி அவரிடம் ஆசி பெறுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’உலகைத் துற, சிவனை நினை’ - ஈஷாவில் ஐக்கியமான கங்கனா!