கரோனா பரவல் காரணமாகப் போடப்பட்டுள்ள ஊரடங்கால் திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட்டன. இதனால், பல நடிகர்கள் தங்களது படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட்டனர். அதுமட்டுமின்றி, அதில் சில நடிகர்கள் ஓடிடி தளத்திற்காகவே நடித்தனர்.
அந்த வகையில் பாலிவுட் நடிகை கஜோல் ’த்ரிபங்கா’ என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகர் ரேணுகா ஷாஹானே இயக்கியுள்ள இப்படம் ஜனவரி 15ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
மூன்று பெண் கதாபாத்திரங்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் டீசரை கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஒடிசி கலைஞராக வரும் கஜோல் படத்தின் டீசர் வசனங்கள் இல்லையென்றாலும், படத்தைப் பார்க்க ஆர்வத்தைத் தூண்டியுள்ளது என்றால் மிகையல்ல.
இதையும் படிங்க...த்ரிஷ்யம் 2 ரகசியம் வெளிப்படுமா? டீசருக்குள் ஒளிந்திருக்கும் சர்ப்ரைஸ்!