கஜோல், ஷ்ருதி ஹாசன், நேகா துபியா, நீனா குல்கர்னி, முக்தா பார்வே, சந்தியா மெத்ரே, ரமா ஜோஷி, ஷிவானி ரகுவன்ஷி, யஷஸ்வினி தயமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள குறும்படம் 'தேவி'. பெண் இயக்குநர் பிரியங்கா பானர்ஜி எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை ரியான் ஸ்டீபன், நிரஞ்சன் இணைந்து தயாரித்துள்ளனர்.
முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம், சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஒன்பது பெண்களின் வாழ்க்கைமுறையை எடுத்துரைக்கும் வகையில் உருவாகியுள்ளது. இப்படம் திங்கள்கிழமை (மார்ச் 2) இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.
சகோதரத்துவத்தின் வலுவான பிணைப்பு, பாலியல் வன்புணர்வு உள்ளிட்டவைகளை இப்படம் விவாதித்துள்ளது. ஒரு அறையில் அமர்ந்திருக்கும் பெண்கள் அனைவரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளனர். பின் அவர்கள் மிகவும் பதற்றத்துடன் குழப்பமான மனநிலையில், தங்களின் வாழ்வில் நடந்த பிரச்னைகள், பாலியல் வன்புனர்வுக்கு ஆளான பிறகு சந்தித்த பிரச்னைகள் குறித்து ஒருவருடன் ஒருவர் கலந்து விவாதிக்கின்றனர். மேலும் இதே போன்ற சம்பவத்தால் தங்களது குடும்பத்தினரின் அன்பை உறவை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 13 நிமிடம் ஓடக்கூடிய இப்படம் இணையவாசிகளை உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது.
இந்த படம் குறித்து கஜோல் கூறுகையில், இந்த படத்தின் ஸ்கிரிப்ட் என்னிடம் வந்தபோது மிகவும் பிடித்துபோய் விட்டது. வெவ்வேறு பெண்களுடன் நடிக்க உள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. இப்படத்தின் மேக்கிங் எனக்கு மிகவும் விப்பமாக இருந்தது. படப்பிடிப்பில் இருந்த அனைத்து தரப்பு பெண்களுடன் இருந்த ஒத்துழைப்பு, ஒற்றுமை எனக்கு மிகவும் பிடித்த வகையில் இருந்தது என்றார்.
இதையும் வாசிங்க: கஜோலுடன் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம் - ஷ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி!