பெண்களே நடித்து பெண் இயக்குநர் பிரியங்கா பானர்ஜி இயக்கும் 'தேவி' என்ற குறும்படம் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப்படத்தில் கஜோல், ஸ்ருதி ஹாசன், நேகா துபியா, நீனா குல்கர்னி, முக்தா பார்வே, சந்தியா மெத்ரே, ரமா ஜோஷி, ஷிவானி ரகுவன்ஷி, யஷஸ்வினி தயமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப்படம் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஒன்பது பெண்களின் வாழ்க்கை முறையையும், ஒரு சிறிய அறையில் வசிக்கும் ஒரு கூட்டுப் பெண் பறவைகளின் நடைமுறை வாழ்வியலையும் எடுத்துரைக்கும் வகையில் உருவாகி வருகிறது.
-
#Kajol, #ShrutiHaasan, #NehaDhupia, #NeenaKulkarni, #MuktaBarve, #SandhyaMhatre, #RamaJoshi, #ShivaniRaghuvanshi and #YashaswiniDayama... #FirstLook of short film #Devi... Directed by Priyanka Banerjee... Produced by Electric Apples Entertainment for Large Short Films. pic.twitter.com/Q4F0m3EH5k
— taran adarsh (@taran_adarsh) January 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Kajol, #ShrutiHaasan, #NehaDhupia, #NeenaKulkarni, #MuktaBarve, #SandhyaMhatre, #RamaJoshi, #ShivaniRaghuvanshi and #YashaswiniDayama... #FirstLook of short film #Devi... Directed by Priyanka Banerjee... Produced by Electric Apples Entertainment for Large Short Films. pic.twitter.com/Q4F0m3EH5k
— taran adarsh (@taran_adarsh) January 16, 2020#Kajol, #ShrutiHaasan, #NehaDhupia, #NeenaKulkarni, #MuktaBarve, #SandhyaMhatre, #RamaJoshi, #ShivaniRaghuvanshi and #YashaswiniDayama... #FirstLook of short film #Devi... Directed by Priyanka Banerjee... Produced by Electric Apples Entertainment for Large Short Films. pic.twitter.com/Q4F0m3EH5k
— taran adarsh (@taran_adarsh) January 16, 2020
'தேவி' குறும்படத்தை நிரஞ்சன் ஐயங்கார் மற்றும் ரயன் ஸ்டீபன் எலெக்ட்ரிக் ஆப்பிள்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநராக களமிறங்கும் பிரியங்கா பானர்ஜியின் இந்தப் படம் முழு நீளக் குறும்பட வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ருதிஹாசன் மற்றும் கஜோல் முதன் முறையாக குறும்படங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.