ETV Bharat / sitara

கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம் - பாடகி ஜெனிஃபர் லோபஸ் - திருமணத்திற்கு அவசாரம் காட்டாத ஜெனிஃபர் லோபஸ்

"நாங்கள் ஒன்றாக வாழ்நாள் முழுவதும் இருக்கபோவதால் திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம். திருமணத்திற்கு பின் நாங்கள் ஒரே குடும்பமாக வாழ உள்ளோம். குழந்தைகளுக்கு ஒரு நல்ல பெற்றோராகவும் நல்ல தம்பதியினராகவும் வாழ இருக்கிறோம் என பாடகி ஜெனிஃபர் லோபஸ் தெரிவித்துள்ளார்.

Jennifer Lopez
Jennifer Lopez
author img

By

Published : Mar 2, 2020, 4:16 PM IST

அமெரிக்க பாடகி ஜெனிஃபர் லோபஸ் குரலுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் பாடகியாக மட்டுமல்லாது நடிகையாகவும் சில படங்களில் நடித்துள்ளார். 50 வயதான இவர் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து செய்து கொண்டார். தற்போது இவர் முன்னாள் பேஸ் பால் வீரர் அலெக்ஸ் ரோட்ரிகஸ் என்பவருடன் பழகி வருகிறார்.

இவர்களின் இந்த நட்புறவு குறித்து அமெரிக்க தொலைக்காட்சிகள் அவ்வபோது சர்ச்சை கலந்த விவாதங்களை ஒளிப்பரப்பு செய்து வருவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் சமீபத்தில் ஜெனிஃபர் லோபஸ் அலெக்ஸூடான உறவு குறித்து தொலைக்காட்சி சேனல்களில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளாதாவது: முதலில் நானும் அலெக்ஸூம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டபோது நீங்கள் எங்களது திருமணம் உடனே நடைபெறும் என நினைத்துக்கொண்டது எனக்கு மிக வேடிக்கையாக தெரிகிறது. இது நீங்கள் இன்னும் பழமைவாதத்தை பின்பற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பதை காட்டுகிறது. நானும் பழமைவாதத்தை பின்பற்றியதால் தான் மூன்று முறை திருமணம் செய்து கொண்டு விவகாரத்து பெற்றுள்ளேன்.

எனக்கு என்ன செய்ய தோன்றுகிறதோ செய். அதை பற்றி நாம் விவாதிக்கலாம் என என்னிடம் அலெக்ஸ் வெளிப்படையாக கூறியுள்ளார். நாங்கள் ஒன்றாக வாழ்நாள் முழுவதும் இருக்கப்போவதால் திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம். திருமணத்திற்கு பின் நாங்கள் ஒரே குடும்பமாக வாழ உள்ளோம். குழந்தைகளுக்கு ஒரு நல்ல பெற்றோராகவும் நல்ல தம்பதியினராகவும் வாழ இருக்கிறோம் என்றார்.

ஜெனிஃபர் லோபஸூக்கு ஏமி மரிபெல் முனீஸ், மெக்சிலியன் டேவிட் மியூஸ் என்னும் இரட்டையார்கள் உள்ளனர். அதே போல் அலெக்ஸூக்கு நடாஷா அலெக்ஸாண்டர் ரோட்ரிகஸ், எல்லா அலெக்ஸாண்டர் ரோட்ரிகஸ் ஆகிய மகள்கள் உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.